// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** தவெக இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆட்சி - யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

தவெக இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆட்சி - யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

 யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் பீமநகர் ரபீக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது...தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் அரசு இஸ்லாமியர்களுக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. 

பாரதிய ஜனதா கட்சியின் புதிய வடிவமாக தமிழக வெற்றி கழகம் உருவெடுத்து இருக்கிறது.மேலும் இஸ்லாமியர் வணக்க வழிபாட்டில் ஒன்றான குர்பானி வழக்கில் மேல்முறையீடு இல்லை.இது தவெகவின் நிலைப்பாடு.தற்போது முஸ்லிம் இட ஒதுக்கீடு அரசாணையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாஜகவின் மாடல் அரசாக செயல்படும் தமிழக வெற்றி கழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீமநகர் ரபீக் அவரது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments