// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட நிர்வாகம், திருச்சி மாநகர காவல் துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை ஒருங்கிணைத்திருந்தன. 

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள வெஸ்ட்ரி பள்ளி அருகே தொடங்கிய இந்தப் பேரணியை, மாநகர காவல் ஆணையர் காமினி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.




வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியானது, மத்திய பேருந்து நிலையம் மற்றும் பெரியார் சிலை வழியாகச் சென்று, திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தை வந்தடைந்து நிறைவடைந்தது.இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர். 


பங்கேற்பாளர்கள் அனைவரும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Post a Comment

0 Comments