// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தகத்தை அறிமுகம் செய்த வேர்ல்டு புக் ஆஃப் அச்சீவர்ஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள்!

திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தகத்தை அறிமுகம் செய்த வேர்ல்டு புக் ஆஃப் அச்சீவர்ஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள்!

திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தகம் அறிமுகம் திருச்சியில் நடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், தமிழக ஆளுநர் விருத்தாளருமான யோகா ஆசிரியர் விஜயகுமார் எழுதிய திருச்சி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் தொகுப்பு நூலினை வேர்ல்டு புக் ஆஃப் அச்சீவர்ஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக்கலைஞர்கள்  இளம்வழுதி,  சந்திரசேகரன்  ராஜ்குமார் உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தினர்.

திருச்சி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள்நூல் குறித்து நூலாசிரியர் விஜயகுமார் பேசுகையில், சேகரிப்புக்கலை என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல,அது வரலாறு, பண்பாடு, அறிவியல் மற்றும் சமூக நினைவுகளைப் பாதுகாக்கும் உயரிய பண்பாட்டு இயக்கமாகும். ஒரு சிறிய பொருளின் பின்னணியில் மறைந்திருக்கும் காலத்தின் சுவடுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பாலமாகச் சேகரிப்பாளர்கள் திகழ்கின்றனர்.திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பல்வேறு வகையான அரிய சேகரிப்புகளில் ஈடுபட்டு, அவற்றை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்காகக் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தி, பொது அறிவையும் வரலாற்று விழிப்புணர்வையும் பரப்பி வரும் சமகால சேகரிப்புக் 

கலைஞர்களின் அர்ப்பணிப்பைப் பதிவு செய்யும் முயற்சியாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments