NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** துக்கத்திலும் ஆசிரியருக்கு நன்றி சொன்ன பள்ளி மாணவர் : நெகிழ்ச்சி சம்பவம்

துக்கத்திலும் ஆசிரியருக்கு நன்றி சொன்ன பள்ளி மாணவர் : நெகிழ்ச்சி சம்பவம்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் கம்பரசம்பேட்டை காலனி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் முகில் இன்று அவனது பாட்டி இறந்து விட்டார் ...பாட்டியின் உடல் அருகே இருந்த மாணவன் பள்ளியில் இன்று ஆசிரியர் தின விழா மூன்று மணிக்கு நடைபெற உள்ளது நினைவுக்கு வந்த உடன் சீருடை அணிந்து பள்ளிக்கு வந்து விட்டார் - விழாவில் தலைமை ஆசிரியர் வரவேற்புரை பேசிக் கொண்டு இருந்தார். 




மாணவன் சார் எனக்கு ஒரு நிமிடம் மைக் தாருங்கள் எனக் கேட்டு வாங்கி என்னுடைய முன்னேற்றத்திற்கு காரணமான ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் எனக் கூறி விட்டு அனுமதி பெற்று உடன் வீட்டுக்கு சென்று பாட்டியின் உடல் உள்ள இடத்திற்கு சென்று விட்டார்' பள்ளியின், ஆசிரியர்களின் மீதான அன்பும் மரியாதையும் இன்றும் நின்று நிலவுகிறது என்பதை இம் மாணவன் நிருபித்து உள்ளார்.

Post a Comment

0 Comments