// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** மத்திய அரசை கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்...! இஸ்லாமியர் பங்கேற்க அழைப்பு

மத்திய அரசை கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்...! இஸ்லாமியர் பங்கேற்க அழைப்பு

NIA மற்றும் அமலாக்கத் துறை, வருமான வரித்துறைகளை கொண்டு முஸ்லிம் சமூகத்தினை வஞ்சிக்க நினைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற சேவை அமைப்பினுடைய தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகளை எந்த முகாந்திரமும் இன்றி அத்துமீறி கைது செய்ததை கண்டித்து 


திருச்சியில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு கூட்டம் இஸ்லாமிய கூட்டமைப்பின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் இமாம் R.அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி MBA அவர்கள் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இதில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இதில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று பாலக்கரை ரவுண்டுனாவில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.


Post a Comment

0 Comments