// NEWS UPDATE *** தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி சென்னை நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மனு தவெக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் *** CBSE பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டி

CBSE பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டி

திருச்சி இரட்டை வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள அமிர்த வித்யாலயம் பள்ளியில் மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டியில் 12 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமாா் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


இறுதிப் போட்டியில் அமிர்த வித்யாலயம் அணியும், RSK அணியும் விளையாடியது. இதில் 17/40  என்ற பாய்ண்ட் வித்தியாசத்தில் அமிர்த வித்யாலயம் அணி வெற்றி பெற்று , சுழற்கோப்பையை வென்றது... 2 ஆம் பரிசு -  RSK பள்ளியும்3 ஆம் பரிசு - கேந்திர வித்யாலயம் பள்ளியும் 4 ஆம் பரிசு - காவிரி குளோபல் மேல்நிலைப்பள்ளியும் வெற்றி பெற்றன.

மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்சிறப்பு விருந்தினராக Dr.சுதர்ஸனா (குழந்தைகள் மருத்துவர்), பள்ளிமுதல்வர் உஷா ராகவன் ஆகியோர்  கலந்து கொண்டு , வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் ,பதக்கங்களையும் வழங்கிப் பாராட்டினர்


பள்ளி முதல்வர் உஷா ராகவன்  அவர்கள் வரவேற்புரையும், வாழ்த்துரையும் வழங்கினார்.உடற்கல்வி ஆசிரியர் திரு. முருகபூபதி அவர்கள் நன்றியுரை கூறினார்.தேசிய கீதத்துடன்   நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments