திருச்சி சரக காவலர் வாட்ஸ் ஆப் குரூப்பில் ஆபாச படங்களை வெளியிட்ட டிஎஸ்பி பணியிடமாற்றம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் டிஜிபி உத்தரவு. திருச்சி சரக சார்பாக காவலர்களுக்கு என்று தனி whatsapp குரூப் செயல்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் புகாருக்கு உள்ளான பெண் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் டிஎஸ்பி பரவாசுதேவனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள பரவாசுதேவன் ஜீயபுரம் DSP ஆக பணியாற்றி வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக அமைச்சர் ஒருவரால் இவர் பாராட்டப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜெயசீலன் ஜீயபுரம் DSP ஆக கூடுதல் பொறுப்பேற்கிறார்.
0 Comments