// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** பரிபூர்ணா அகாடமியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு நிறுவனர் சதீஷ் தேவராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினார்

பரிபூர்ணா அகாடமியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு நிறுவனர் சதீஷ் தேவராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினார்

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுக்காவில் உள்ள  வளநாடு கைகாட்டியில் அமைந்துள்ள பரிபூர்ணா அகாடமியில், இந்த ஆண்டு 2022, நீட் வகுப்பில் பயின்று சிறப்பாக தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு  பரிபூர்ணா அகாடமி நிறுவனர் சதீஷ் தேவராஜ் பாராட்டி, பரிசளித்து மாணவர்களை கௌரவப்படுத்தினார். 


விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் இங்கு ஆசிரியர்கள் அளித்த பயிற்சி முறை மிகவும் எளிமையாக இருந்ததாகவும்,தங்கும் விடுதியும் உணவும் சிறப்பாக இருந்ததாகவும், எங்களது மருத்துவராகும் இலட்சியத்தை அடைவதற்கு பெரும் உறுதுணையாகவும் இருந்த பரிபூர்ணா அகாடமிக்கு இதயங்கனிந்த நன்றிகளை கூறினர்.



மேலும் சாதித்த மாணவர்களின் பெற்றோர்களும் தற்போது பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர்களும் பேசுகையில் தமிழ் நாட்டில் உள்ள கிராமப்புற மாணவர்களும் சாதிக்கும் வகையில் எளிமையான முறையில் இந்த பரிபூர்ணா அகாடமி செயல்பட்டு வருவதாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்களும், மாணவர்களும் மிகவும் பெருமைப்பட கூறினார்கள்.

Post a Comment

0 Comments