BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** கோவை காரில் சிலிண்டர் எரிந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தியளிக்கிறது என்று சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் தமீமுல் அன்சாரி நிஜாமி தெரிவித்துள்ளார்

கோவை காரில் சிலிண்டர் எரிந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தியளிக்கிறது என்று சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் தமீமுல் அன்சாரி நிஜாமி தெரிவித்துள்ளார்

கோவை காரில் சிலிண்டர் எரிந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு   திருப்தியளிக்கிறது என்று சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் தமீமுல் அன்சாரி நிஜாமி தெரிவித்துள்ளார்...

இது குறித்து சமாஜ்வாதி கட்சியின்  பொதுச் செயலாளர் டாக்டர் தமீமுல் அன்சாரி நிஜாமி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:.


இந்தியாவில் மற்ற  மாநிலங்களை விடவும் சட்டம் ஒழுங்கு காக்கப்படும்  சிறந்த மாநிலமாக  தமிழகம் திகழ்ந்து வருகிறது. உறக்கத்தை தொலைத்து,ஓய்வை துறந்து இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும்  முதல்வர் ஸ்டாலின் தாயுள்ள நிர்வாகத்தில் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது.



தமிழகத்தில், இல்லம் ஒளிர, உள்ளம் குளிர மக்கள் மகிழ்ச்சியோடு நிம்மதியாக  வாழ்ந்து வரும் நிலையில் இந்த ஆட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்தி மக்கள் மனதை விட்டும் தூரமாக்கி விடலாம் என்று சிலர் மனப்பால் குடித்து கொண்டிருக்கிறார்கள்

அவர்கள் எண்ணம் எள்முனையளவும் ஈடேறப் போவதில்லை என்பது நிதர்சனமான நிஜம். நிகழவிருந்த மிகப்பெரிய அசம்பாவிதம் காவல்துறையின் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பின் காரணமாக சில சக்திகளின் தீவிரவாத வெறியாட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு அதன் வேரை கண்டுபிடிக்கும் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் மிகத் தெளிவான முடிவின் அடிப்படையில் என்ஐஏ அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது...

இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை உள்நோக்கத்துடன் பேசி வருவது கண்டனத்திற்குரியது. அவர் தான்  ஸ்டண்ட் அரசியல்வாதியாய்  பரபரப்புக்காக  வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் பேசி வருகிறார் என்றால் ஆளுநரும் மாநில அரசோடு கலந்து பேசி நிஜத்தை நிலைதிறுத்த வேண்டியவர் அரசியல் கலந்து பேசி வருவது ஏற்புடையதல்ல.


மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி மீது மாசு கற்பிக்கும் முயற்சியை ஆளுநர் அவர்கள் கைவிட வேண்டும் என்று  கேட்டுக் கொள்கிறேன். நடப்பது நமக்கான ஆட்சி..நம்பகமான ஆட்சி..நல்லாட்சி என்பதை புரிந்து கொண்டு சில ஷைத்தான்களின் மூளை சலவைக்கு புத்தியை பலி கொடுத்த மிகச் சொற்பமான இஸ்லாமிய இளைஞர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் திருந்தி கொள்ள வேண்டும்.

தீவிரவாதப் போக்கு ஒருபோதும் தீர்வாகாது. ஸ்டாலினின் தியாக நல்லாட்சி, ராகுல்காந்தியின் தேசபக்த  யாத்திரை, மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசின் நிர்வாகத் திறனற்ற செயல்பாடுகள் அனைத்தையும் மக்கள் மனதில் இருந்து நீக்கி  விட்டு பாஜக வளர்வதற்கு மட்டுமே இத்தகைய தீவிரவாத செயல்கள் நீரூற்றும் என்பதை பைத்தியகார சிந்தனை கொண்ட அந்த சொற்ப  இஸ்லாமிய இளைஞர்கள் உணர்ந்து கொள்வது நலம்.

இந்த விவகாரத்தில் உடனடியாக குரல் கொடுத்த  ஜவாஹிருல்லா, கே.எஸ். அழகிரி, தொல் திருமாவளவன்  ஆகியோருக்கு நன்றி. இந்த தருணத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு துணை நிற்போம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் தமீமுல் அன்சாரி நிஜாமி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments