BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** கம்போடியாவில் தவித்த தமிழக இளைஞரை மீட்ட திருச்சி எஸ்டிபிஐ கட்சி

கம்போடியாவில் தவித்த தமிழக இளைஞரை மீட்ட திருச்சி எஸ்டிபிஐ கட்சி

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவர் கடந்த ஜீலை மாதம் வேலைக்காக கம்போடியா சென்றுள்ளார். அவருக்கு ஒரு நிறுவனத்தில் வேலை என கூறி அழைத்து சென்றுள்ளனர். ஆனால் கொடுத்த வேலை கொடுக்காமல் ஏமாற்றி அவர்களை வேறு வேலை செய்ய கொடுமைப்படுத்தி உள்ளனர்.  உடனடியாக அவர் இங்குள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி மூலம் தமிழக காவல் துறைக்கும், தமிழக அரசுக்கும் தன் நிலையை கூறிய பின் அவரை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட இப்ராஹீம் இன்று விமானம் மூலம் திருச்சி வந்தார். இங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


இங்குள்ளவர்களை நிறுவனத்தில் 1000 டாலருக்கு வேலை என கூறி அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சென்று சீனக்காரர்களிடம் அழைத்து செல்பவர்களை 4000 டாலருக்கு விற்று விடுகின்றனர். அவர்கள் அங்கு ஆன்லைன் மோசடி உள்ளிட்ட மோசடி வேலைகளில் ஈடுபடுத்த கட்டாயப்படுத்துகின்றனர். 



அந்த வேலையை செய்யவில்லை என்றால் அடிப்பது, ஷாக் வைப்பது என கொடுமைப்படுத்துகின்றனர். நான் திருச்சி தில்லைநகரை  6 வது கிராஸ் சேர்ந்த ஷாநவாஸ் , முபாரக், முஃப்தாக் என்கிற ஏஜெண்ட் மூலம் அங்கு சென்றேன். நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக செயல்பட்டு தமிழக காவல் துறை வழிக்காட்டல்படி தப்பித்து விட்டேன். ஆனால் ஏராளமான தமிழர்கள் அங்கு கொடுமைப்படுத்தப்படுகின்றனர். அவர்களை அரசு மீட்க வேண்டும், அதே போல ஏமாற்றும் ஏஜெண்ட்டுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



Post a Comment

0 Comments