BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** பணிக்கு வராமல் ஊதியம் பெறும் துப்புரவு பணியாளர்கள் மீது நடவடிக்கை கோரி மனு

பணிக்கு வராமல் ஊதியம் பெறும் துப்புரவு பணியாளர்கள் மீது நடவடிக்கை கோரி மனு

திருச்சி மாவட்டம் மக்கள் உரிமை கூட்டணி சார்பில்மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையரிடம் மக்கள் உரிமை கூட்டணியின் மாவட்ட செயலாளர் முகமது காசிம் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்,


அதில் திருச்சி மாநகரத்தில் உள்ள 65 வார்டுகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் பணிக்கு வராமல் முழு சம்பளமும் வாங்குவதாக தெரிவித்துள்ளனர் மேலும்துப்புரவு பணியாளர்கள் வார்டு மேஸ்திரிகள் ஆதரவின் பெயரில் பணிக்கு வராமலே மாத சம்பளம் பெற்று வருவதாகவும் குழு ஒப்பந்ததாரர் பணியாள பணியாளர்கள் ஒவ்வொரு மேஸ்திரி மற்றும்உதவி ஆணையர்கள் ஐந்து மண்டலங்களில் தங்களின் சுய தேவையான வேலைகளுக்கு துப்புரவு பணியாளர்களை பயன்படுத்துவதாகவும்,நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வராமல் மாத சம்பளம் பெற்று வரும் பணியாளர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்து மனு அளித்ததாக தெரிவித்தனர்,


இதில் தோழமைக் கட்சியை சேர்ந்த தமிழ் புலிகள் கட்சி மத்திய மண்டல செயலாளர் ரமணா, அகில இந்திய ஏழை மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜான் பாஷா,மக்கள் உரிமை கூட்டணி தெற்கு மாவட்ட செயலாளர் ஜோசப், மேற்கு மாவட்ட செயலாளர் தனபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்,

Post a Comment

0 Comments