// NEWS UPDATE *** கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜன் கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை *** SDPI கட்சி மண்டல மாவட்ட தலைவர்கள் கலந்துரையாடல்

SDPI கட்சி மண்டல மாவட்ட தலைவர்கள் கலந்துரையாடல்

 SDPI கட்சியின் நெல்லை,தஞ்சை,திருச்சி,மதுரை ஆகிய மண்டலங்களின் மாவட்ட தலைவர்கள் உடனான கலந்துரையாடல் கூட்டம் திருச்சியில் இன்று கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


மாநில பொதுச் செயலாளர் அஹமது நவவி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி,மக்கள் நல பணிகள் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.


நிகழ்வில் மாநில செயலாளர் அபூபக்கர் சித்தீக்,நெல்லை மண்டல தலைவர் ஜூல்பிக்கார் அலி,தஞ்சை மண்டல தலைவர் தப்ரே ஆலம், திருச்சி மண்டல தலைவர் இமாம் ஹஸ்ஸான்,மதுரை மண்டல செயலாளர் முஜீப் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments