BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** ரயில்வே தனியார் மயமாக்குதலை கண்டித்து SRMU தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

ரயில்வே தனியார் மயமாக்குதலை கண்டித்து SRMU தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

ரயில்வே தனியார் மயத்தை முறியடிக்கிற வகையில் இந்திய ரயில்வே பாதுகாப்பு வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பொன்மலையில் SRMU துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் பணிமனை முன்பு நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ரயில்வே தனியார்மய முடிவை உடனே நிறுத்த வேண்டும், புதிய டென்ஷன் திட்டத்தை மாற்றி 2004க்கு முந்தைய தரிசன திட்டத்தை வழங்கிட வேண்டும். 


ரயில்வே நிலையங்களை விரைவு ரயில்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது.  லட்சக்கணக்கான காலிடங்களை நிரப்பாமல் பயணிகள் பாதுகாப்பை அலட்சியப் படுத்தக்கூடாது என்று தெரிவித்தார்.


மேலும் SRMU பொதுச் செயலாளர் கண்ணையா வழிகாட்டுதலின் படி இந்தியாவில் எந்த ரயிலும் ஓடாத அளவில் அகில இந்திய அளவில் பெரிய போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்தார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 100 -க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments