BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** கஸ்பா நல சங்கத்தின் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

கஸ்பா நல சங்கத்தின் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

 திருச்சி மணப்பாறைபுத்தாநத்தம் கஸ்பா நல சங்கத்தின் சார்பாக  ஜமாஅத் நிர்வாகளிடம் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 


புத்தாநத்தம் கஸ்பா நலச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது. கொரோனா கால கட்டத்தில் பல்வேறு கட்டங்களாக உணவு பொருட்கள் மற்றும் பக்ரீத் காலங்களில் குர்பானி பணிகளை இந்த சங்கம் செய்து வந்தது. அந்த வகையில் புத்தாநத்தம் பகுதிக்கு சமூக பணிகளுக்கு ஆம்புலன்ஸ் தேவை என்று முடிவு செய்து புத்தாநத்தம் கஸ்பா நலச் சங்கம் சார்பில் தொழில்திபர்கள், வியாபாரிகள் பல்வேறு தன்வந்தவர்களிடம் வசூல் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டது. 


இதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாக புத்தாநத்தம் ஜமாஅத் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு அர்ப்பணிப்பு விழா வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அல்பி ஸகீரீன் உரிமையாளர் மவ்லவி ஆர். தாஹிர் இம்தாதி தலையை வகித்தார். விழாவில் புத்தாநத்தம் கஸ்பா நலச் சங்கத்தின் இணைச் செயலாளர் சீமாட்டி ரெடிமேட்ஸ் உரிமையாளர் முஹம்மது பாரூக் வந்த அனைவரையும் வரவேற்று பேசினார். 


விழாவிற்கு புத்தாநத்தம் கஸ்பா நலச் சங்கத்தின் பொருளாளர் எஸ்.எஸ்.என். கம்யூட்டர் சென்டர் உரிமையாளர் யாசர் அரபாத், துணைச் செயலாளர்கள் ஜெனரல் ஸ்டோர் உரிமையாளர் முகமது இஸ்மாயில், அம்ஜத்கான், துணைத் தலைவர் அஜ்மீர் காஜா, நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்தியாளர் தாஹிர், பிஸ்மில்லாஹ் டிரேடர்ஸ் உரிமையாளர் அப்துல் மன்னான், சம்சுல் ஹூதா, ஸ்டார்வே சர்ட்ஸ் உரிமையாளர் அன்சர் அலி, எம்‌.கே. நவாஸ் கான், பெட்ரோல் நசீர் அஹமது, முஹம்மது ஹாலில் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.



இந்த நிகழ்ச்சியில் மணப்பாறை வட்டாட்சியர் தனலெட்சுமி, மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன், மணப்பாறை எம்.எம். மருத்துவமனை நிர்வாக இயக்குநர் எம்.எம். காசிம், பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி அஹமது ரிபாயி கான் மக்துமி, புத்தாநத்தம் ஆரம்ப சுகாதார மெடிக்கல் அதிகாரி டாக்டர் கிரிஸ் குமார், புத்தாநத்தம் ஆரம்ப சுகாதார டாக்டர் அப்துல் ஹஸன், புத்தாநத்தம் ஊராட்சி தலைவி அமுதா ஆனந்தன், புத்தாநத்தம் கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் குமார் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் புத்தாநத்தம் கஸ்பா நலச் சங்கம் செயல்பாடுகள் மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணித்தையும் பாராட்டி பேசினார்கள்.



பின்னர் புத்தாநத்தம் கஸ்பா நலச் நிர்வாகிகள் முன்னிலையில் புத்தாநத்தம் ஜமாஅத் நிர்வாகத்தினரும, ஒன்றிய கவுன்சிலருமான ரபீக் ராஜா மற்றும் நிர்வாகிகளிடம்  நீடூர் ஜாமி ஆ மிஸ்பாஹுல் ஹூதா அரபிக் கல்லூரி முதல்வரும், புத்தாநத்தம் நகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவருமான மவ்லவி முஹம்மது இஸ்மாயில் பாஜில் பாகவி புதிய ஆம்புலன்ஸ் வண்டி சாவியை ஒப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மனாஸ்மு ஆதா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி அஹமது கபீர் பாகவி, துணை இமாம் மவ்லவி தாஹா ஹஜ்ரத், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எஸ்.எம்.கே.எம். முஹம்மது இஸ்மாயில், புத்தாக்கம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், வியாபாரிகள், தன்வந்தவர்கள், ஜமாஅத்தார்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

Post a Comment

0 Comments