BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி...! ஐக்கிய விவசாயிகள் முன்னணி துண்டு பிரசுரம் விநியோகம்

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி...! ஐக்கிய விவசாயிகள் முன்னணி துண்டு பிரசுரம் விநியோகம்

 ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) தலைமையில் வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி ( உழவர்களின் டெல்லி போராட்டத்தின் துவக்க நாள் ) உழவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றாத ஒன்றிய அரசைக் கண்டித்து சென்னையில் வருகிற 26.11.2022 அன்று காலை 10 மணிக்கு பனகல் மாளிகையிலிருந்து ஆளுநர் மாளிகை வரை மாபெரும் பேரணி நடைபெறுவதை முன்னிட்டு இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொது மக்களிடையே பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.


இந்நிகழ்விற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் தலைமை தாங்கினார்...தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  மாவட்ட செயலாளர் நடராஜன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநகர் மாவட்ட  செயலாளர்  கார்த்திகேயன்  விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்டச் செயலாளர் தங்கதுரை மாநிலச் செயலாளர் பழனிச்சாமி ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் மக்கள் அதிகாரம் சரவணன் நிர்மலா, அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கம் ஷைனி ஆகியோர் பொதுமக்களிடம் பிரசுர விநியோகம் செய்து சென்னை பேரணியில் கலந்து கொள்ள அறைகூவல் விடுத்தனர்.

Post a Comment

0 Comments