// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** வழக்கறிஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

வழக்கறிஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

 வழக்கறிஞர்களை ஒருமையில் பேசி வரும் திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரை இடமாற்றம் செய்யக்கோரி திருச்சி மாவட்ட குற்றவியல்  வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர் 


திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி, உதவி ஆய்வாளர் சத்தியா தேவி ஆகியோர் வழக்கறிஞர்களை ஒருமையில் பேசி கண்ணிய குறைவாக நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரையும் பணியிடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என 


திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் 100 க்கும் மேற்பட்டோர் இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்...


வழக்கறிஞர்களை ஒருமையில் பேசி வரும் திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகிய இருவரையும் பனியிடமாற்றம் செய்ய வேண்டும் எனவும்,  திருவெறும்பூர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் பொய் வழக்குகள் அதிகம் பதிவு செய்வதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளோம். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார் என கூறினார்.


Post a Comment

0 Comments