BREAKING NEWS *** சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஐந்தாண்டு சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டது அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வரும் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு *** திருச்சியில் தமுமுக தலைமை செயற்குழு பொதுக்குழு

திருச்சியில் தமுமுக தலைமை செயற்குழு பொதுக்குழு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் கழக தலைவர் பேராசிரியர். MH. ஜவாஹிருல்லா MLA அவர்கள் தலைமையில் 04.11.22 காலை 10.00 மணியளவில் திருச்சி என் எம் கே காலணி எஸ் எஸ் மஹாலில் நடைபெறுகிறது.மமக பொது செயலாளர் ப. அப்துல் சமது MLA, தமுமுக பொது செயலாளர் பேராசிரியர். ஹாஜாகனி, மாநில பொருளாளர்கள்  ஷபியுல்லாஹ் கான், கோவை உமர் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.


தமிழகத்தில் 68 அமைப்பு மாவட்டங்களில் கிளை கழகம் முதல் மாவட்டம் நிர்வாகம் வரை கழக அமைப்பு தேர்தல் விதிமுறைகளை கடைபிடித்து ஜனநாயக முறைபடி தேர்தல்கள் நடைபெற்று புதிதாக பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைமை நிர்வாகிகள் உள்ளிட்ட 430 தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.


கழகத்தின் செயல் அறிக்கைகள், வரவு செலவு கணக்குகள், அமைப்பு விதிகளில் திருத்தம் மற்றும் புதிய விதிகளை சேர்ப்பது என தலைமை செயற்குழுவில் பல்வேறு பொருள்களில் விரிவாக விவாதங்கள் நடைபெற இருக்கிறது.


தலைமை செயற்குழுவில் இறுதி செய்யபட உள்ள தீர்மானங்கள் அனைத்தும் தலைமை பொதுக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்.


மறுநாள் நவம்பர் 5 காலை 10.30 மணிக்கு திருச்சி சமயபுரம் அருகில் கழக அமைப்பு தேர்தல் - 2022 தலைமை பொதுக்குழு கூட்டம் தலைவர் பேராசிரியர் MH.ஜவாஹிருல்லாஹ் MLA, அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.


மமக பொது செயலாளர் ப. அப்துல் சமது MLA, தமுமுக பொது செயலாளர் பேராசிரியர். ஹாஜாகனி, மாநில பொருளாளர்கள்  ஷபியுல்லாஹ் கான், கோவை உமர் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.


மாவட்ட தலைமை நிர்வாகிகள் மாவட்ட துணை மற்றும் அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 1800 தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.

தலைமை செயற்குழுவில் நிறைவேற்ற பட்ட அமைப்பு விதிகள் தீர்மானங்களுக்கு தலைமை பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படும்.

கழக அமைப்பு விதிகளின் படி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான கழக தலைவர், பொதுசெயலாளர் கள் 2, பொருளாளர்கள் 2 ஆகியவற்றுக்கான தேர்தல் கழக அமைப்பு விதிகளின் படி நடைபெற்று புதிய தலைமை நிர்வாகிகள் தேர்வு செய்யபட இருக்கிறார்கள். 

தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு ஏற்பாடுகள் நிர்வாகிகளுக்கு தேவையான உணவு மற்றும் தங்கும் வசதி உள்ளிட்ட பணிகளை  திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC மற்றும் கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா ஆகியோர் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள்  பணியாற்றி வருகிறார்கள்.

Post a Comment

0 Comments