NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி மற்றும் மகளிர் அணி சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் பாலக்கரையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சையது ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.


மெஹருனிஷா ஆலிமா இறை வசனம் ஓதி நிகழ்வை துவக்கி வைத்தார். மகளிர் அணி மாவட்ட செயலாளர் ரஹிமா ஷாகுல் வரவேற்புரையாற்ற, மகளிர் அணி மாவட்ட தலைவர் முனைவர் பைரோஸ் துவக்க உரை நிகழ்த்தினார்.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.


சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணைத் தலைவர் முப்தி உமர் பாரூக் ஹஜ்ரத் அவர்கள் பேச்சாளர் ஆவதற்கான வழிமுறைகள் என்ற தலைப்பிலும், பேரா. மைதீன் அப்துல் காதர் அவர்கள் மேடைப் பேச்சாளர் ஆவது எப்படி என்ற தலைப்பிலும், இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஷேக் முகமது கௌஸ் அவர்கள் தலைமைத்துவ பண்புகள் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.



மகளிர் அணி மாவட்ட பொருளாளர் ஆரிபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, இளைஞரணி மாவட்ட பொருளாளர் சாதிக்குல் அமீன் நன்றியுரை ஆற்றினார்.


இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் ஜாபர் ஷெரீப், அலாவுதீன், நவாப்கான், நியாஸ் அகமது, ஆரிப் ஆகியோர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments