// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** திருச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

திருச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

 திருச்சி அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் ரேபிடோ பைக் டாக்சி நிறுவனம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் திருச்சி தில்லை நகரில் உள்ள கி.ஆ.பெ ஆரம்ப பள்ளியில் இன்று நடைபெற்றது. அகர்வால் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் கணபதி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில்  ரேபிடோ மேலாளர் ஈஸ்வர், அலுவலர்கள் ரமேஷ், சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இம்முகாமில் கண்புரை மற்றும் பார்வை குறைபாடு போன்ற அனைத்து கண் நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்பட்டது.




கிட்டப்பார்வை,  தூரப்பார்வை உள்ளவர்களுக்கு  கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட  ஏராளமானோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

Post a Comment

0 Comments