BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழகத்தில்  நடைபெற்ற கோவை கார் சிலிண்டர் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட வழக்கை தமிழக அரசு தேசிய புலனாய்வு முகாமிற்கு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது,

அதைத்தொடர்ந்து தமிழக காவல்துறையினர் பல்வேறு மாவட்டங்களில் சோதனைகள் நடத்தி வருகின்றனர்...



இதில் தமிழக காவல்துறையைச் சேர்ந்த சில காவலர்கள் சமூக நல்லிணக்கத்தையும் அமைதியும் கெடுக்கும் நோக்கத்தில் எந்த உத்தரவும் பெறாமல் முஸ்லிம்கள் வீட்டில் சோதனை என்ற பெயரில் அத்துமீறி அவர்கள் மீது பொய்யான வழக்கை போடுவதற்கு முயல்கின்றனர்,

மேலும் இந்த வழக்கை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் சென்னை பூந்தமல்லியில் உள்ளது இந் நிலையில் தமிழக காவல்துறையினர் சம்பந்தமில்லாத அதற்கான அதிகாரம் எதுவும் இல்லாத உள்ளூர் நீதிமன்றங்களில் நீதிபதியிடம் பொய்யான தகவலை கொடுத்து இதுபோன்ற சோதனைகள் நடத்தி வருகின்றனர்.


இது போன்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட சோதனைகள் நடத்தும் போது வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள், வெளிநபர்கள் எவரும் சோதனை நடத்தப்படும் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் ஆனால்  சோதனைகளின் போது முன்கூட்டியே பத்திரிக்கை ஊடகத்திற்கு தகவல் கொடுத்து சில காவலர்கள் வீட்டிற்குள் சோதனை செய்வதை படம் பிடிக்க அனுமதிக்கின்றனர்.இது போன்ற காவல்துறையின் செயல்பாடுகள் தமிழக அரசுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் உள்ளது எனவே விசாரணையை நேர்மையுடன் நடத்தவும் இது போன்று செயல்படும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்


இதில் தமிழ் தேச மக்கள் முன்னணி வழக்கறிஞர் கென்னடி, மக்கள் கலை இலக்கிய கழகம் ஜீவா, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சம்சுதீன், அமைப்பு சாரா தொழிலாளர் சைனி, மஜ்லிஸ் கட்சி முகமது இக்பால், தாருல் இஸ்லாம் வாசிம், ராஜா,வழக்கறிஞர் கமருதின்,அகில இந்திய முஸ்லிம் லீக் அப்துல்லா மக்கள் உரிமை இயக்கம் முகமது அலி ஜின்னா, சமூகநீதி பேரவை வழக்கறிஞர் ரவிக்குமார், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments