BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** SDPI கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்

SDPI கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்

SDPI கட்சியின் திருச்சி  தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் முபாரக் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னகர்.ரபீக் அவர்கள் வரவேற்புரையாற்றினார்


திருச்சி தெற்கு மாவட்ட கட்சியின் ஆண்டறிக்கையை 

மாவட்ட பொதுச் செயலாளர் தமீம் அன்சாரி  மற்றும் மாவட்ட செயலாளர் ஏர்போர்ட்.மஜீத் மாவட்ட செயளாலர் ஆகியோர் மதர் ஜமால் சமர்ப்பித்தார்கள்.


இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக்  மற்றும் திருச்சி மண்டல தலைவர் இமாம்.R. ஹஸ்ஸான் பைஜி ஆகியோர்கள்  கலந்து கொண்டு சமகால அரசியல் சூழ்நிலையை பற்றி சிறப்புரையாற்றினார்.


இந்த பொதுக்குழு கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 :

மாநகராட்சி அனைத்து இடங்களிலும் பாதாள சாக்கடை அமைப்பதற்கு சாலைகளிலும் தெருக்களிலும் மிகப்பெரிய பள்ளங்களை தோண்டி வைப்பதினால் மிகப்பெரிய விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகவே மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு இந்த பள்ளங்களை மூடி பாதாள சாக்கடை அமைக்கும் பணியை விரைவாகப் முடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது



தீர்மானம் 2 :

வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினத்தை எஸ்டிபிஐ கட்சி வருடதோறும் மிகப்பெரிய மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறது. இந்த வருடமும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆகவே பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 3 :


திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் வெறிநாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதினால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும், பெரியவர்களும் பயந்து செல்கிறார்கள் எனவே மாநகராட்சி  நிர்வாகம் மிகப்பெரிய ஆபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பே விரைவாக செயல்பட்டு வெறி நாய்களை பிடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

மேலும் இந்நிகழ்வில்  SDTU மாநில செயலாளர் முஹம்மது  ரபீக்,வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா,விம் மாநில செயற்குழு உறுப்பினர் மெஹராஜ் பானு, ஊடக அணி மண்டல பொறுப்பாளர் ரியாஸ் மற்றும் தொகுதி ,அணி ,கிளை நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதீன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.



Post a Comment

0 Comments