BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சியில் 1.8 கிலோ மீட்டருக்கு 50 ரூபாய் நிர்ணயம் செய்ய கோரி திருச்சி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

திருச்சியில் 1.8 கிலோ மீட்டருக்கு 50 ரூபாய் நிர்ணயம் செய்ய கோரி திருச்சி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

திருச்சி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் 500க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.

அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- 


 கார்பேர்ட் நிறுவனங்களான (ஓலா) (யூபர்) (ரோபிட்டோ) இந்த நிறுவனங்கள் மூலமாக ஆட்டோ ஓட்டுநர்கள் பெரும் கஷ்டத்திற்கும் எங்களுடைய பொருளாதாரம் பாதிப்பு ஏற்படுவதாகவும். இதன் காரணமாக கார்பேர்ட் நிறுவனங்கள் திருச்சி மாவட்டத்தில் தடை செய்யக்கோரியும், மீட்டர் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் முடிவு செய்து உள்ளதாகவும். ஆட்டோ ஓட்டுநர் நண்பர்கள் வைத்து இருக்கக்கூடிய வாட்ஸ்ஆப் மூலம் அலைபேசி எண்ணை பகிர்ந்து. 


ஆட்டோ வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறோம்.இதில் ஒருசில கார்பேர்ட் நிறுவனத்தின் கைக்கூலிகள் கடந்த 19-ம் தேதி அன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் திருச்சி அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் கூடுதலாக மக்களிடம் பணம் வசூலிக்கிறோம் என்று புகார் மனு கொடுத்திறிக்கிறார்கள்.



இதில் புதிதாக தமிழ்நாடு மீட்டர் ஆட்டோ என்று ஒரு நிறுவனம் (Corporate உந்துதலின் பேரில் ) திருச்சியில் வந்து இருக்கிறது. 200 ரூபாய் கட்டினால் தான் 2000 ரூபாய்க்கு சவாரி தரப்படும் இல்லையென்றால் சவாரி முடக்கப்படும். ஆகவே உள்ளுர் மீட்டர் ஆட்டோ நாங்கள் எந்த கமிஷனும் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்து வருகிறோம் எனவே திருச்சி மாவட்ட அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்று சேர்ந்து மீட்டர் கட்டணத்தை 1.8 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும் அதற்கு மேல் வரும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 16 ரூபாயும் திருச்சி மாவட்டத்தில் மீட்டர் கட்டணத்தை அமல்படுத்தகோரி  மாவட்டத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை  மனுவை அளித்தனர்.

Post a Comment

0 Comments