BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** தேசிய கல்லூரி முப்பெரும் விழாவில் தமிழக ஆளுநர் பங்கேற்பு

தேசிய கல்லூரி முப்பெரும் விழாவில் தமிழக ஆளுநர் பங்கேற்பு

 திருச்சி தேசிய கல்லூரியில் முப்பெரும் விழா பாரதியார் பிறந்தநாள் தேசிய மொழிகள் தினமாகவும், ராமலிங்க வள்ளலார் 200 ஆண்டு ஜெயந்தியையும், சுதந்திரம் பெற்ற 75 ஆம் ஆண்டு நிறைவையும் முப்பெரும் விழாவாக கொண்டாடுகின்றனர். இந்திய விடுதலைப் போரில் தென்னிந்திய மொழிகளின் பங்களிப்பு என்னும் பொருளில் ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.. தேசிய கல்லூரியில் நடைபெறும் விழாவில் தமிழக கவர்னர் ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் சிறப்புரையாற்றினர்.


தமிழக ஆளுநர் ரவி கருத்தரங்கில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய பொழுது


 இந்திய சுதந்திர போராட்ட வரலாறு இந்திய தேசிய காங்கிரஸை மட்டும் மையப்படுத்தப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்துள்ளனர். கிராமம் கிராமமாக போராட்டங்கள் நடந்துள்ளது எனவே சுதந்திர போராட்டம் மக்களை மையப்படுத்தி ஆவணப்படுத்தப்படுத்தி திருத்தி எழுத்தப்பட வேண்டும்


காலனியாதிக்க சிந்தனை எச்சத்தின் வெளிப்பாடே

ஆங்கில மொழி தான்  உயர்ந்தது என்கிற எண்ணம். ஆனால் நம் தமிழ், சமிஸ்கிருதம் போன்றவை ஐரோப்பிய மொழிகளை காட்டிலும் வளமிக்கவை.




பிரிட்டிஷ் வருகைக்கு முன் இந்திய கிராமங்கள் தன்னிறைவாக இருந்தன. ஆனால் அவர்கள் வருகைக்கு பின் பல வரிகள் விதிக்கப்பட்டன. அதனால்  கிராமங்களில் போராட்டம் நடத்தப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தான் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து மக்களுக்கு அதிகம் தெதிந்தது நேதாஜி சுபாஷ் சந்திர போஸே அவ்வாறு தான் மக்களுக்கு தெரிந்தது. நான் தமிழ்நாட்டிற்கு வந்த பொழுது தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பட்டியல் கேட்டேன் வெறும் 30 பேர் பட்டியல் மட்டும் தான் தந்தார்கள் தற்பொழுது நான் அது குறித்து கவனம் செலுத்தும் போது 800-க்கும் அதிகமானோர் பட்டியல் உள்ளது




 சுதந்திரத்திற்காக போராடிய அனைவரும் சுதந்திர போராட்ட வீரர்கள் தான்.

 அகிம்சை போராட்டம் தான் அதிக அளவு பதிவாகி உள்ளது. ஆயுத போராட்டங்கள் அதிகம் பதிவாக வில்லை அவற்றையும் பதிவு செய்ய வேண்டும்

 பிரிட்டீஷ் ஆட்சியால் தான் ஆங்கிலம், அவர்களின் சட்டம் தான் பாடப்புத்தகத்தில் உயர்ந்தது என புத்தகத்தில் இருந்தது.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments