BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** சாலையோரத்தில் தூங்கும் நடைபாதை வாசிகளுக்கு போர்வை வழங்கிய பள்ளி மாணவி

சாலையோரத்தில் தூங்கும் நடைபாதை வாசிகளுக்கு போர்வை வழங்கிய பள்ளி மாணவி

 இளம் வயதில் ஏராளமானவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட திருச்சி மோ.பி.சுகித்தா திருச்சி சுப்பிரமணிபுரத்தில் வசிக்கும் மோகன், பிரகதா தம்பதியரின் மகளான சுகித்தாவின் உதவும் குணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

மோ.பி.சுகித்தா மேலபுதூர் செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.


இவர் தனது சிறிய வயதில் இருந்தே தனது தந்தை மோகனை போலவே உதவும் எண்ணம் கொண்டவராகவே வளர்ந்து வருவதோடு மட்டும் அல்லாமல் கடந்த மூன்று வருடங்களாகவே திருச்சியில் குடும்பத்தினரால் கை விட பட்டு சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு அவ்வப்போது உணவு, பண்டிகை காலங்களில் உடை, வெயில் காலங்களில் விசிறி, செருப்பு என கொடுத்து வருகின்றார்....

அது போல இவர் கடந்த மூன்று வருடங்களாக சாலையோரம் கடுமையான குளிரில் உறங்கும் 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய ஆதரவற்ற மக்களுக்கு போர்வை போர்த்தி வருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது


மேலும் சுகித்தா கூறுகையில் நான் பள்ளிக்கு மற்றும் வெளியே செல்லும் போது சாலையோரம் உணவின்றி, உடையின்றி இருக்கும் இவர்களை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கும் அதனால் நான் எனக்கு என் பாட்டி, அப்பா, அம்மா தரும் பணத்தை உண்டியலில் சேர்த்து வைப்பது என்னுடைய வழக்கம்..

அது போல அந்த உண்டியலில் கணிசமான தொகை சேரும் போது குடும்பத்தால் கை விட பட்டு ஆதரவின்றி ரோட்டில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடை, செருப்பு, விசிறி என கொடுத்து வருகின்றேன்..

அது போல இன்று என் அண்ணன் சுஜித் உடன் மார்கழி மாத குளிரில் சாலையோரம் உறங்கும் 100 க்கும் மேற்பட்ட மக்களுக்கு இரவு 12 மணி முதல் போர்வை போர்த்தி வருகின்றேன் இந்த நல்ல காரியத்தை தொடர்ந்து மூன்று வருடங்களாக கொடுத்து வருகிறேன் என கூறினார் .

சுகிதா மற்றும் சுஜித் ஆகியோரின் இந்த உதவும் மனிதாபிமான செயலை அப்போது மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்

Post a Comment

0 Comments