திருச்சி மாநகர் பகுதியில் சமீபகாலமாக இரவு நேரங்களில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது... இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வீதி விதியாக சென்று ஒவ்வொரு கடை மற்றும் வீடுகளை நோட்டமிட்டு செல்கின்றனர்.. திருச்சி அமமுக தகவல் தொழில்நுட்ப திருச்சி மாவட்ட செயலாளர் குமார் பாலக்கரை எடத்தெரு கிருஷ்ணன் கோவில் எதிர்புறம் செல்போன் ரீசார்ஜ் மற்றும் உதிரிபாகம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்...
நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியை எடுத்து அவரது கடையில் பூட்டை உடைத்து கடையில் உள்ள பணம் மற்றும் பொருள்களை திருடி செல்ல முயற்சி செய்துள்ளனர்.. செல்போன் கடையில் சிசிடிவி கேமிரா இருந்ததை கண்டு பூட்டை உடைக்காமல் திருடர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர்.. இது குறித்து குமார் திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்... பூட்டை உடைக்க முயற்சி செய்த நபர்கள் யார் என்று விசாரித்து வருகின்றனர்..
0 Comments