BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** தனியார் பள்ளியில் பா.ஜ.க பிரச்சாரம்... யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் புகார்

தனியார் பள்ளியில் பா.ஜ.க பிரச்சாரம்... யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் புகார்

திருச்சி பீமநகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 19 ஆம் தேதி அன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வை சுமார் ஒரு மணி நேரம் தாமதப்படுத்திவிட்டு பாஜக சார்பில் கட்சி கொடியுடன் மற்றும் கட்சி பேனர் பதாகைகளுடன் கிறிஸ்துமஸ் கேக் வழங்குவதாக கூறி பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பாராட்டு விழா பிரச்சாரத்தை பள்ளியின் முதல்வர் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை வைத்து அரசியல் பிரச்சாரம் செய்துள்ளனர்...


இந்த பள்ளிக்கூடத்தில் 80 சதவீதம் மாற்று மதத்தை சேர்ந்த மாணவ ,மாணவிகள்  கல்வி பயில்கின்றனர்..

இந்த சூழ்நிலையில் தொடர்ந்து இந்த பள்ளிக்கூடத்தை பள்ளியின் முதல்வரும் அதன் நிர்வாகமும் பாஜகவின் கொள்கைகளை பரப்பும் கூடமாக பயன்படுத்தி வருகின்றனர் எனவே அரசியல் பாகுபாடு இல்லாமல் நடைபெற வேண்டி கல்விக்கூடத்தை அரசியல் பிரச்சார கூடமாக சட்டத்திற்கு புறம்பாக செயல்படுத்தும் பள்ளியின் முதல்வர் மற்றும் நிர்வாகத்தின் மீதும் பள்ளி கல்வித்துறை சார்பாக நடவடிக்கை எடுக்குமாறு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் மனு அளிக்கப்பட்டது..

இந்த நிகழ்வில் மாநில தலைவர் பீமநகர் S.ரபீக், மாநில செயலாளர் அப்பாஸ் அலி,மாநில துணை செயலாளர் அன்சர்,திருச்சி மாவட்ட தலைவர் ராயல் சாதிக்,மாவட்ட பொருளாளர் ஷாஹீன்,மாவட்ட துணை தலைவர் சதக்கத்துல்லாஹ் மற்றும் பீமநகர் கிளை தலைவர் நஜிமுதீன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Post a Comment

0 Comments