BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** வைகுண்ட ஏகாதசி விழா இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் முதலுதவி மையம்

வைகுண்ட ஏகாதசி விழா இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் முதலுதவி மையம்

 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் பெருமைக்குரியதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா  தொடங்கியது. 


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் எல்லாம் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி திருவிழாவாகும். பகல் பத்து, ராப்பத்து என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு முக்கிய நிகழ்ச்சியாகும். இதனைக்காண லட்சக்கணக்கான மக்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு உள்ளூர்,வெளியூர், பிற மாநிலம் மற்றும் அயல்நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். 


சிலநேரம்  பக்தர்கள் நீண்ட நேரம்  வரிசையில் நிற்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. இத்தகைய நேரங்களில், எதிர்பாராத வகையில் முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க, பக்தர்களின் நலன் காக்கும் வகையில் ஸ்ரீரங்கம் சேஷராய மண்டபத்தில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை சேர்மன் ராஜசேகரன், செயலர் ஜவகர் ஹசன் அறிவுறுத்தல் படி  அரங்கநாதர் திருக்கோவில் சேஷராயர் மண்டபத்தில் முதலுதவி மையம் அமைக்கப்பட்டது. 


இந்திரா கணேசன் செவிலியர் கல்லூரி யூத் ரெட் கிராஸ் மாணவிகள் முதலுதவி மையத்தில் செயல்படுகிறார்கள். முதலுதவி மைய துவக்க விழாவில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி மாவட்ட கிளை ஆலோசகர் இளங்கோவன், வழிகாட்டு குழு உறுப்பினர் யோகா ஆசிரியர் விஜயகுமார், கிழக்கு தாலுகா செயலர் அபூபக்கர் சித்திக், இப்ராஹிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  முதலுதவி மையத்தில் உடல் எடை ,இரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. வெள்ளை கோபுரம் அருகில் ஆம்புலன்ஸ் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments