// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பள்ளிவாசலில் இலவச மருத்துவ முகாம்

திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பள்ளிவாசலில் இலவச மருத்துவ முகாம்

உங்கள் தோழன் அறக்கட்டளை, ஜெனரல் பஜார் பென்சனர்  பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பள்ளிவாசலில் இன்று நடைபெற்றது. 


இம்முகாமிற்கு திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் முகமது ரூஹுல் ஹக் தலைமை வகித்தார். இம்முகாமில் இரத்த பரிசோதனை, சர்க்கரை, இரத்த கொதிப்பு, குழந்தை மருத்துவம்,  இதய பரிசோதனை, கண் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.






முகாமில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை பரிசோதனைகள் செய்து கொண்டனர்.

Post a Comment

0 Comments