NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பள்ளிவாசலில் இலவச மருத்துவ முகாம்

திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பள்ளிவாசலில் இலவச மருத்துவ முகாம்

உங்கள் தோழன் அறக்கட்டளை, ஜெனரல் பஜார் பென்சனர்  பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பள்ளிவாசலில் இன்று நடைபெற்றது. 


இம்முகாமிற்கு திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் முகமது ரூஹுல் ஹக் தலைமை வகித்தார். இம்முகாமில் இரத்த பரிசோதனை, சர்க்கரை, இரத்த கொதிப்பு, குழந்தை மருத்துவம்,  இதய பரிசோதனை, கண் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.






முகாமில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை பரிசோதனைகள் செய்து கொண்டனர்.

Post a Comment

0 Comments