// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சியில் ஒருங்கிணைந்த கல்வி வளாகம் அமைக்க வேண்டும் - SDPI கட்சி கோரிக்கை

திருச்சியில் ஒருங்கிணைந்த கல்வி வளாகம் அமைக்க வேண்டும் - SDPI கட்சி கோரிக்கை

 ஆசிாியா்கள் மற்றும் மாணவர்களின்  கோாிக்கை ஏற்று திருச்சியில் ஒருங்கிணைந்த கல்வி வளாகம் அமைக்க மாவட்ட ஆட்சியர் முன்வர வேண்டும் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவா் K.முபாரக் அலி வலியுறுத்தல்.

திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகள், ஆதி திராவிடா், மாற்றுத் திரனாளிகள் மற்றும் பழங்குடியினா் நலத்துறை பள்ளிகள், அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகள், மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் மழலையா் பள்ளிகள் கணிசமாக இயங்கி வருகின்றன.


இவைகளுக்கான கல்வி அலுவலகங்கள் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன. அத்துடன் ஆசிாியா்களுக்கான கூட்ட அரங்குகள் இன்றி தனியாா் பள்ளிகளை அரசு நாடவேண்டியுள்ளது. எனவே கல்விச் சாா்ந்த அனைத்து அலுவலகங்களும் ஒரே வளாகத்தில் அமைத்து மாணவா்கள், பெற்றோா்கள், ஆசிாியா்கள் மற்றும் கல்வி நிா்வாகிகள் மத்தியில் ஏற்படும் இன்னல்களை தவிா்க்க SDPI கட்சி திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு  கோரிக்கை வைத்துள்ளார்.

Post a Comment

0 Comments