BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரம் செல்ல தடை

பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரம் செல்ல தடை

 இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.இந்த மாநாட்டில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் அமெரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த 100 விருந்தினர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்..


இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இவர்கள் வரும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து கண்டுகளிக்க சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பணிகள் செல்லத் தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி20 மாநாடு கூட்டம் நடைபெறுகிறது. மாநாட்டிற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வர இருப்பதால் பாதுகாப்பு நலன் கருதி, பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments