BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி மணப்பாறை கருங்குளம் ஜல்லிக்கட்டு- 33 பேர் காயம்

திருச்சி மணப்பாறை கருங்குளம் ஜல்லிக்கட்டு- 33 பேர் காயம்

 திருச்சி மணப்பாறை அருகே கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் 668 காளைகள் வாடிவாசலில் சீறிப்பாய்ந்தன.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கருங்குளம் புனித வனத்து அந்தோணியார் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஶ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வம் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். 


முதலில் கோவில் காளைகள் அவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள 700 ஜல்லிக்கட்டு காளைகள் கோவில் திடலில் அமைக்கப்பட்டுள்ள வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. சீறி வந்த காளைகளை அடக்க 230 மாடுபிடி வீரர்கள் என ஒரு பிரிவுக்கு 25 வீரர்கள் என களம் இறக்கப்பட்டு ஒருவருக்கொருவர் போட்டி போட்டு காளைகளை அடங்கினர்..


போட்டியில் வீரர்களின் பிடிக்கு அடங்க மறுத்து வெற்றி பெறும் காளைகளுக்கும், காளைகளை அடக்கி வெற்றி பெறும் காளையர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், பீரோ, சைக்கிள், கட்டில், கிரைண்டர், அண்டா, ரொக்கப்பணம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் 33 பேர் காயமடைந்துள்ளனர். 6 பேர் மேல்சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டடனர். சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட கருங்குளத்தைச் சேர்ந்த சுல்லான்(எ) பிரவீன் என்பவருக்கு வாசிங்மெசின் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட மணியாரம்பட்டி டேம்நால் ரோட்டைச் சேர்ந்த டேவிட்ரெக்ஸ் காளைக்கு 4 கிராம் தங்ககாசு பரிசாக வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments