// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** 51 வது வார்டு பகுதியில் குடிநீர் விநியோகம் வழங்க செய்ய கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மனு

51 வது வார்டு பகுதியில் குடிநீர் விநியோகம் வழங்க செய்ய கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மனு

திருச்சி  பீமநகர் 51 வது வார்டு கூனிபஜார் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக  குடிநீர் விநியோகம் இல்லை..150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது ... பொதுமக்கள் பணம் கொடுத்து  பதப்படுத்தப்பட்ட குடிநீர் வாங்கி உபயோகப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது ‌. வசதி இல்லாதவர்கள் குடிநீர் குடிக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது .. இது குறித்து வார்டு கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.. 


இன்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட பொருளாளர் (பீமநகர்)B.சாகுல் தலைமையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதனை  சந்தித்து புகார் மனு அளித்தனர் ... இந்தப் புகார் குறித்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் உறுதி அளித்தார்.. இந்நிகழ்வில்

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தென்னூர் பகுதி செயலாளர் ஷேக் மற்றும் கூனிபஜார் உஸ்மான் செரிப் உடன் இருந்தனர்

Post a Comment

0 Comments