BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சியில் குத்துச்சண்டை பயிற்சி அகாடமி திறப்பு

திருச்சியில் குத்துச்சண்டை பயிற்சி அகாடமி திறப்பு

 திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக குத்துச்சண்டை பயிற்சி அகாடமி திறக்கப்பட்டது திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்த குத்துச்சண்டை பயிற்ச்சியாளரும் மாநில தேசிய மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வெள்ளி உள்ளிட்ட பதகங்களை வென்று பல சாதனைகளை புரிந்து வரும் குத்து சண்டை விளையாட்டு வீரரும் பயற்ச்சியாளருமான எம்.எழில்மணி B.A.NSNIS அவர்களின் ஆர்டிலரி பாக்ஸிங் & பிட்னஸ் அகடமி   திருச்சி  காட்டுரில் உள்ள கைலாஷ் நகரில் திறப்பு விழா நடைபெற்றது  இவ்விழாவில்  சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் திரு.Ve.கோவிந்தராஜூலு அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி ஆர்டிலரி பாக்ஸிங் & பிட்னஸ் அகாடமியை திறந்து வைத்தார்...


நிகழ்வில் அவர் பேசுகையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்புடன் பலர் விளையாட்டுகளில் கலந்து கொண்டு முயற்சி செய்து வருகின்றனர்...



குத்துச்சண்டை போன்ற தனிநபர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் துடிப்பும் உள்ள இளைஞர்கள் இளம்பெண்களுக்கு இந்த குத்துச்சண்டை பயிற்சி அகடமி மிகவும் பயன் தரும் திருச்சியில் முதல் முறையாக அதுவும் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு வெற்றிகளை பெற்று  முறையான பயிற்சி பெற்று தற்போது பயற்ச்சியாளராக இருந்து இந்த குத்துச்சண்டை பயற்சி மையத்தை தொடங்கி இருக்கும்  எழில் மணி அவர்களின் இந்த பயிற்சி அகடமி பல்வேறு திறமையான குத்துச்சண்டை வீரர் வீராங்கனைகளை உறுவாக்கி பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று திருச்சிக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அமையும் என்கிற நம்பிக்கை உள்ளது...





அவருக்கும் இந்த பயிற்சி மையம் தொடங்க உறுதுணையாக இருந்த அவரது தந்தை முருகன் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறினார்  இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக  கட்டா குஸ்தி, தவம்,விட்னஸ் ,சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிரபல தமிழ் திரைப்பட  நடிகை திருமதி.ஜி. சுமதி அவர்கள் கலந்து கொண்டு குத்துச்சண்டை பயற்சி வளையத்தை திறந்து வைத்து குத்துச்சண்டை பயற்சி பெற்று வரும் பெண்களுக்கு குத்துச்சண்டை கையுறைகள் வழங்கினார் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருச்சி மண்டல தலைவர் திரு. எம். தமிழ்செல்வம் அவர்கள் கலந்து  கொண்டு உடற்பயிற்சி தளவாடங்களை இளைஞர்கள் இளம்பெண்கள் உடற்பயிற்சி செய்து பயன்படுத்த திறந்து வைத்தார்...





மேலும் இவ்விழாவில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் அவர்கள் சிறப்பு அழைப்பாளர் களில் ஒருவராக கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் அவர் தமது வாழ்த்துரை யில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டில் சாதிக்க துடிக்கும் பல திறமையான இளைஞர்கள் இளம்பெண்கள் உள்ளனர் அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க பயிற்ச்சி யாளர்கள் அவர்கள் பயிற்சி பெற தேவையான கட்டமைப்புகள் இருந்தால் பல்வேறு சாதனைகளை அவர்கள் புரிவார்கள் அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக குத்துச்சண்டை பயிற்சி பெற   ஆர்டிலரி பாக்ஸிங் & பிட்னஸ் அகடமி இன்று திறக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது குத்துச்சண்டை முறையாக பயிற்சி பெற வேண்டும் என்றால் சென்னைக்கு சென்று தான் பயிற்சி பெற வேண்டிய நிலை உள்ளது சென்னையில் பல குத்து சண்டை பயிற்ச்சி அகடமிகள் அதிகம் உள்ளன ஆனால் திருச்சியில் இதுபோன்ற குத்து சண்டை பயிற்ச்சி அகடமிகள் இல்லை இந்த நிலையை மாற்றும் வகையில் தற்போது திருச்சி காட்டூர் பகுதி கைலாஷ் நகரில் ஆர்டிலரி பாக்ஸிங் & விட்னஸ் அகடமி தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது இந்த அகாடமியின் நிர்வாகியும் பயிற்ச்சியாளருமான எழில் மணி அவர்கள் குத்துச்சண்டை போட்டிகளில் மாநில தேசிய அளவில் பல பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி பதகங்களை வென்று சாதனை புரிந்துள்ளார் மேலும் குத்துச்சண்டை குறித்து முறையான பயிற்சி பெற்று திருச்சியில் பல மாணவ மாணவிகள் இளைஞர்களுக்கு குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருகிறார் தற்போது இந்த குத்துச்சண்டை பயிற்சி அகடொமியை தொடங்கியதன் மூலமாக திருச்சி மாவட்டத்தில் இருந்து பல்வேறு குத்துச்சண்டை விளையாட்டு வீரர்கள் உருவாகி மாநில தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று திருச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்பார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது இப்பயிற்சி அகடொமியை தொடங்கியுள்ள அவருக்கும் அவருக்கு பக்கபலமாக இருந்த அவரது தந்தைக்கும் மற்றும் நண்பர்களுக்கும்  அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பிலும்  வாழ்த்துக்களை  தெரிவித்தார் இந்நிகழ்வில் திருவெறும்பூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அறிவழகன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் திருச்சி மாவட்ட குத்துச்சண்டை சங்கத்தின் செயலாளர் நடராஜன் குத்து சண்டை பயிர்ச்சியாளர் செல்வகுமார் பயிற்ச்சியாளர் ரவிசந்திரன்  பிஷப் கல்லூரி உடற்கல்வி பயிற்ச்சியாளர் பால்ராஜ் பி எச் எல் தொழிற்சங்க நிர்வாகி மிதுன் சக்கரவர்த்தி தீபன் ஸ்டீபன் பிரின்ஸ் சுரேஷ்இளம்பருதி ஜான் கென்னடி உள்ளிட்டோரும்  திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments