// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் இலவச மருத்துவ முகாம்

திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் இலவச மருத்துவ முகாம்

திருச்சி தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி மற்றும் சமயபுரம் சீனிவாசன் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் மற்றும் மகளிர் மகப்பேறு மருத்துவ முகாம் திருச்சி பீமநகர் பகுதியில் இன்று நடைபெற்றது. 


எஸ்டிபிஐ கட்சியின் 52 வது வார்டு தலைவர் அமீர்தீன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமை தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி தொடங்கி வைத்தார். மேலும் இம்முகாமில் மேற்கு தொகுதி செயலாளர் சையது முஸ்தபா, மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல்லா ஹசன் பைஜி, வடக்கு மாவட்ட தலைவர் நியமத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். 



இம்முகாமில் கண் பரிசோதனை, சிறுநீரக மருத்துவம், ecg, காது மூக்கு தொண்டை சிகிச்சை, இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்த பரிசோதனை, தோல் மருத்துவம், மூளை நரம்பியல் மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இந்த இலவச மருத்துவ முகாமில் பீம நகர் 51,52 வது வார்டு பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments