BREAKING NEWS *** சர்ச்சை பேச்சு - ஜாமீன் கோரி மகாவிஷ்ணு மனுத்தாக்கல் *** ராகுலின் பதவி பறிப்பு மூலம் பாஜக வெற்றி பெறலாம் என்ற கனவு தகர்ந்து போய் இருக்கின்றது - ஜவாஹிருல்லா பேட்டி

ராகுலின் பதவி பறிப்பு மூலம் பாஜக வெற்றி பெறலாம் என்ற கனவு தகர்ந்து போய் இருக்கின்றது - ஜவாஹிருல்லா பேட்டி

மதுரையில் மனிதநேய மக்கள் கட்சியினர் பாஜக அரசை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கர்நாடகத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கபட்ட 4% இட ஒதுக்கீடு இரத்து செய்ததை கண்டித்தும்,


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்தும் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தமமுகவினர் பங்கேற்றிருந்தனர். கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக,  விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 







இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் ஜவாஹிருல்லா தெரிவித்ததாவது. 

ராகுல் காந்தி பதவிப்பறிப்பு மற்றும் கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட நான்கு சதவீத இட ஒதுக்கீடு  பறிப்பு ஆகியவற்றை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றோம்.

Post a Comment

0 Comments