// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** வேளாண்மைக்கு தனி பட்ஜெட் - மத்திய அரசுக்கு விவசாய சங்க தலைவர் விசுவநாதன் கோரிக்கை

வேளாண்மைக்கு தனி பட்ஜெட் - மத்திய அரசுக்கு விவசாய சங்க தலைவர் விசுவநாதன் கோரிக்கை

தமிழக அரசை போன்று மத்திய அரசும் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க தலைவர் பூ. விசுவநாதன் கோரிக்கை வைத்துள்ளார்....


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்....


இந்தியாவில் சிறு தானியங்கள் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் பாரம்பரிய உணவுகளை பாதுகாக்க வேண்டும் இந்தியாவை எந்த கட்சி ஆட்சி செய்தாலும் விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதில்லை... விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படுவதில்லை. விவசாயம் லாபம் இல்லாத தொழிலாக மாறி கடும் வறுமையில் விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது...  எனவே இந்தியாவில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை கொண்டு வர வேண்டும்..  தமிழக அரசை பின்பற்றி மத்திய அரசும் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதை செயல்படுத்த முன் வர வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சி கோரிக்கை விடுக்கிறது

Post a Comment

0 Comments