BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** தேசிய அளவிலான உள் அரங்கு வில்வித்தை போட்டி - வீரர், வீராங் கனைகள் பங்கேற்பு

தேசிய அளவிலான உள் அரங்கு வில்வித்தை போட்டி - வீரர், வீராங் கனைகள் பங்கேற்பு

திருச்சி ஸ்போபிட் அகடாமி சார்பில் திருச்சி இந்திரா கணேசன் கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் தேசிய அளவிலான உள் அரங்கு வில்வித்தை போட்டி இன்று நடைபெற்றது. இந்த வில்வித்தை போட்டியை இந்திரா கணேசன் கல்லூரி முதல்வர் கணேசன் மற்றும் தமிழ்நாடு உள் அரங்கு வில் வித்தை சங்க நிர்வாகி டாக்டர் மதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 




இந்த வில் வித்தை போட்டியில் 10 வயது பிரிவு வீரர் வீராங்கனைகள், 14 வயது 17 வயது 19 வயது மற்றும் பெரியவர்களுக்கான பொதுப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.



இந்த உள் அரங்கு வில்வித்தை போட்டியில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக 5000 ரூபாயும் இரண்டாம் பரிசாக 3000 ரூபாயும் மூன்றாம் பரிசாக ரூபாய் 2000 மற்றும் பொது பிரிவு ரூபாய் பத்தாயிரம் என மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கபட்டது. இந்த பரிசுகளை தமிழ்நாடு நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்







இதில் அகடாமி பொதுச் செயலாளர் கேசவன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.  இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 280 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.  இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சி ஸ்போபிட் அகடாமி மணிகண்டன் செய்திருந்தார்.

Post a Comment

0 Comments