// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தேசிய கல்லூரி சார்பில் பொங்கல் விழா

தேசிய கல்லூரி சார்பில் பொங்கல் விழா

 திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறை சார்பாக பொங்கல் விழா மண்ணச்சநல்லூர் அருகே வெங்கன்குடியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது ..


கல்லூரி முதல்வர் முனைவர் கி. குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்  கதிரவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பொங்கல் விழா சிறப்புரை நிகழ்த்தினார்...


உழைத்துக் களைத்து ஓய்ந்து போன உழவர்கள் தங்கள் களைப்பை மறப்பதற்காகக் கொண்டாடும் பாரம்பரிய விழாவாக பொங்கல் விழா திகழ்வதாகவும் சமூகத்தில் ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுப்பதற்காக இது போன்ற விழாக்கள் பெரிதும் துணை செய்வதாக அவர் சிறப்புரை நிகழ்த்தினார்




 மண்ணச்சநல்லூர் மேனாள் ஒன்றியத் தலைவர் திருமிகு இளங்கோ அவர்கள் முன்னிலை வகித்தார். மண்ணச்சநல்லூர் ஒன்றிய மேனாள் தலைவர் திருமதி சீதா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தொழிலதிபர் ஸ்ரீதர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் தொன்மைக் கலைகளான சிலம்பாட்டம், கரகாட்டம், வழுக்கு மரம் ஏறுதல், ஏறு தழுவுதல் , கிடா முட்டு , கோழி சண்டை, முதலிய பல்வேறு கலைகள் இவ்விழாவில் நிகழ்த்தப்பட்டன. தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் உறியடி கல்லூரி மாணவர்களால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. கல்லூரி மாணவிகள் பொங்கலிட்டு விழா சிறப்பாக நடைபெற பங்காற்றினார்கள். தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் உடற்கல்வியியல் துறைத் தலைவரான முனைவர் து . பிரசன்ன பாலாஜி அவர்கள் விழாவினை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து நிறைவில் நன்றியுரை வழங்கினார்


நிருபர் ரூபன்

Post a Comment

0 Comments