// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சியில் மாதா கெபியை இடித்த பஞ்சாயத்து தலைவியின் கணவர் பார்த்தசாரதி மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்

திருச்சியில் மாதா கெபியை இடித்த பஞ்சாயத்து தலைவியின் கணவர் பார்த்தசாரதி மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமாரிடம் திருவெறும்பூர் சர்கார் பாளையம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் புகார் மனு அளிக்க வந்தனர். அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-


திருச்சி திருவெரம்பூர், சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெரு பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக 10 அடி நீளம் மற்றும் 8 அடி அகலத்தில் மாதா கெபி உள்ளது. 


இந்த மாதா கெபியில் அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ குடும்பத்தினர் பிரார்த்தனை செய்து வருகிறோம். இந்நிலையில் அந்தப் பகுதியில் தனிநபர் ஒருவர் ரியல் எஸ்டேட் அமைத்துள்ளார் அவருக்கு ஆதரவாக அந்தப் பாதையில் உள்ள மாதா கெபியை பஞ்சாயத்து தலைவி ரேணுகா தேவியின் கணவர் பார்த்தசாரதி ஆக்கிரமிப்பு எனக் கூறி பொக்லின் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டார். 


ஏற்கனவே இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நேற்று போலீசார் துணையுடன் அராஜகமாக மாதா கெபி அகற்றப்பட்டுள்ளது



 எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இடித்த மாதா கேபியை மீண்டும் கட்டித்தரக்கோரியும் தொடர்ந்து கிறிஸ்தவர்களுக்கு பல்வேறு வகையில் தொந்தரவு அளித்து வரும் பஞ்சாயத்து தலைவி ரேணுகா தேவியின் கணவர் பார்த்தசாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் புகார் மனு அளித்தனர்.

Post a Comment

0 Comments