// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சி 45 ஆவது வார்டு காருண்யா நகரில் அடிப்படை வசதிகள் வேண்டி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழ் புலிகள் கட்சி மத்திய மண்டல செயலாளர் ரமணா தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு வசதி இல்லாமல் உள்ளது .


எனவே இந்த பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க வலியுறுத்தியும் மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கருணையா நகரில் அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் ஆகியோரிடம் புகார் கொடுத்தும். இன்று வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 


பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments