// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழா - கிழக்கு மாவட்டம் சார்பில் கொடியேற்றும் விழா

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழா - கிழக்கு மாவட்டம் சார்பில் கொடியேற்றும் விழா

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்பட்டது வருகிறது... இதனை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் இன்று மனிதநேய‌ மக்கள் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. 


அந்த வகையில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே மனித நேய மக்கள் கட்சியின் கொடியேற்றி பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.



இந்நிகழ்விற்கு மமக மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை வகித்தார். மமக மாவட்ட செயலாளர் அஷ்ரஃப் அலி முன்னிலை வகித்தார்


மேலும் இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ், துணை தலைவர் சையது முஸ்தபா, துணை செயலாளர்கள் காசிம், அகமதுல்லா, சம்சுதீன், ரம்ஜான் அலி, அன்சாரி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments