BREAKING NEWS *** இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள்.. எனக்கு பக்கெட் சின்னம் கொடுங்கள்.. ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு! *** 28 வது வார்டு பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி - மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது ஆய்வு

28 வது வார்டு பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி - மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது ஆய்வு

மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட தலைவரும், திருச்சி மாநகராட்சி 28 வது வார்டு பகுதி மாமன்ற உறுப்பினருமான பைஸ் அகமது இன்று காலை அண்ணா நகர் மெயின் ரோடு பகுதிக்கு உட்பட்ட ஆறாவது கிராஸ் மற்றும் மூன்றாவது கிராஸ், சிவப்பிரகாசம் சாலை, ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளையும்


 அதே போல் பழைய அக்ரகாரம் தெருவில் புதிய பாதாள சாக்கடை பணிகள் குடிநீர் இணைப்பு ஆகிய பணிகள் முடிந்து ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி இளநிலை பொறியாளர் ரமேஷ்பாபு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.


அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் 28 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது கூறுகையில்:-



மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 28 வது வார்டு பகுதியில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். இந்த 28 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் விடுத்துள்ள பாதாள சாக்கடை பணிகள் சாலை பணிகள் மின் கம்பங்கள் மற்றும் குடிநீர் பிரச்சனை குறித்த பல்வேறு கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வருகிறேன் மேலும் திருச்சி மாநகராட்சியில் 28 வது வார்டை முதன்மை வார்டாகவும், குப்பை இல்லாத தூய்மை வார்டாக மாற்றும் முயற்சியில் முழுவதுமாக ஈடுபடுவேன் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments