BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் கூட்டம்

திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் கூட்டம்

SDPI கட்சியின் திருச்சி , நெல்லை, மதுரை, கோவை மற்றும் தஞ்சை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் கூட்டம் இன்று  திருச்சியில் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது. 




இக்கூட்டத்தில் SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர்கள்  S.அகமது நவவி, M.நிஜாம் முகைதீன், மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் K.ராஜா உசேன், ஹஸ்ஸான் பைஜி, சுல்ஃபிகர் அலி, முஜிபுர் ரஹ்மான்,  கோவை மண்டல செயலாளர் அப்துல் ஹக்கீம், தஞ்சை மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா மற்றும் தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்ட தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.




இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி தொடர்பாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு பின்வரும் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


1.தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்திட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


2.மனிதத் தன்மையற்ற முறையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த உண்மை குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.


3.காவிரி டெல்டா பகுதிகளில் பருவம் தவறிப் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு தமிழக அரசு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Post a Comment

0 Comments