NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** துர்க்கை கோயிலில் நாளை கும்பாபிஷேகம் திருச்சியில் திரண்ட ராஜஸ்தானியர்

துர்க்கை கோயிலில் நாளை கும்பாபிஷேகம் திருச்சியில் திரண்ட ராஜஸ்தானியர்

ஶ்ரீராஜஸ்தான் விஷ்ணு சமாஜ் சங்கம் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஶ்ரீஅம்பே பாலாஜி ஶ்ரீபாபா ராம்தேவ்ஜி கோரி திருச்சி பெரிய கடைவீதியில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.. 




இக்கோயில் மகா கும்பாபிஷேகம் நாளை 3 ஆம் தேதி நடைபெறுகிறது.. இதனை முன்னிட்டு நேற்று காவேரியிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. முன்னதாக காந்தி மார்க்கெட், மேலபுலிவார் ரோடு, பெரிய கடைவீதி, NSB ரோடு , மரக்கடை வழியாக ஶ்ரீஅம்பே மாதாஜி ஶ்ரீராம்தேவ் பாலாஜி சிலைகள் 20 ரதங்களுடன் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பபட்டன..






இதில் 15 குருமகராஜ்கள் , ராஜஸ்தான் மாநிலம்‌ மற்றும் திருச்சியில் வசிப்பவர்கள் உட்பட 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.. நாளை 3 ஆம் தேதி அம்பே மாதாஜி ஶ்ரீராம்தேவ் பாபாஜி சிலைகள் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டு  மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது  
-------------------------------------

நிருபர் - தேவாராம் படேல்



Post a Comment

0 Comments