// NEWS UPDATE *** தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி சென்னை நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மனு தவெக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் *** அறுவடை நேரத்தில் டெல்டாவில் வெளுத்து வாங்கிய மழை வருந்தும் விவசாயிகள்

அறுவடை நேரத்தில் டெல்டாவில் வெளுத்து வாங்கிய மழை வருந்தும் விவசாயிகள்

 மிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பலஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது.

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு முதலே கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.


இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக 15 ஆயிரம் ஏக்கர் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பயிர்கள் சாய்ந்தன. மேலும் தொடர்ந்து மழை பெய்தால் பல்லாயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் மழை நீரில் முற்றிலும் சாயக்கூடிய நிலை உருவாகியுள்ளது என விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.இதே போன்று நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments