// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** காப்பீடு துறையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம்

காப்பீடு துறையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம்

 காப்பீடு துறையில் உள்ள வேலைவாய்ப்பு அதன் செயல்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் வாழ்கை அல்லது இதர‌செயல்பாடுகளுக்கான காப்பீட்டின் நோக்கம் குறித்தான தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. 


இவை தேசியக் கல்லூரி முதல்வர் டாக்டர் கே.குமார் தேசிய கருத்தரங்கு  ஒருங்கிணைப்பாளரும், வணிக மேலாண்மை துறை தலைவருமான டாக்டர்.திருஞானசௌந்தரி, மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திரு. கே.கே சுஜித், கோட்ட மேலாளர் எல்.ஐ.சி ஆஃப் இந்தியா (தஞ்சாவூர்), மற்றும் பேராசிரியர். கிருஷ்ண மோகன், காப்பீடு கல்லூரி, இந்திய காப்பீட்டு நிறுவனம் மும்பை அவர்களின் தலைமையிலும் வணிக மேலாண்மை துறை மற்றும் தஞ்சாவூர் காப்பீட்டு நிறுவனம் சார்பாக நடைபெற்றது. 


இதில் பல்வேறு துறை மாணவர்கள் கலந்து கொண்டு காப்பீட்டின் பயன்களை அறிந்து கொண்டனர்கள். திரு. ராஜன், தஞ்சாவூர் காப்பீட்டு நிறுவனம், நன்றி உரையாற்றினார்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments