BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** பா.ஜ.க வை வீழ்த்த தேர்தலில் களப்பணியாற்றுவோம் எங்களுக்கு தேர்தலை விட கொள்கை தான் முக்கியம் - மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமூன் அன்சாரி பேட்டி

பா.ஜ.க வை வீழ்த்த தேர்தலில் களப்பணியாற்றுவோம் எங்களுக்கு தேர்தலை விட கொள்கை தான் முக்கியம் - மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமூன் அன்சாரி பேட்டி

 மனித நேய ஜனநாயக கட்சியின் சிறப்பு தலைமை நிர்வாக குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது . கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி பேசுகையில்...


பா.ஜ.க வை வீழ்த்த எதிர்க்கட்சிகட்சிகள் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என நிதிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஒருங்கிணைத்து ஸ்டாலின் வழி நடத்தியது போல் அகில இந்திய அளவில் பா.ஜ.க வை எதிர்க்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும்.


ம.ஜ.க வின் பொருளாளராக இருந்த ஹாரூன் ரஷீத், அவைத்தலைவர் நாசர் ஆகியோர் கட்சிக்குள் சில குழப்பங்களை விளைவித்ததன் காரணமாக அவர்கள் இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் நேற்று சிலரை கூட்டி எங்களை கட்சியிலிருந்து நீக்கியதாக தெரிவித்துள்ளார்கள். அது தவறு எங்கள் கட்சியை பொறுத்தவரை தலைமை நிர்வாக குழுவிற்கு தான் உள்ளது. இங்கு வந்திருப்பவர்கள் தான் தலைமை நிர்வாக குழுவை சேர்ந்தவர்கள்.


ஈரோடு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அவருக்கு ஆதர்வாக நாங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.


ஒருவரை நாம் விமர்சிக்கும் போது அவரை நாம் நேரில் சந்திக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து விமர்சிக்க வேண்டும் என கலைஞர் கூறியுள்ளார். அப்படி தாம் அரசியல் தலைவர்கள் மற்ற தலைவர்களை விமர்சிக்க வேண்டுமே தவிர அநாகரிகமாக விமர்சிக்க கூடாது.



2024 தேர்தலில் போட்டியிட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி கேட்போம். தொகுதி கிடைத்தால் போட்டியிடுவோம் இல்லையென்றால் பா.ஜ.க வை வீழ்த்த 2021 சட்டமன்ற தேர்தலில் களப்பணியாற்றியது போல் களப்பணியாற்றுவோம். எங்களுக்கு தேர்தலை விட கொள்கை தான் முக்கியம்..

Post a Comment

0 Comments