திருச்சி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் மாவட்ட துணை செயலாளர்கள் முகமது தாஹா. காஜாமைதீன் பழனிபாபா பேரவை மாவட்ட செயலாளர் காஜா மைதீன் மேற்கு தொகுதி செயலாளர் கே.டி.எஸ். பீர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இறுதியாக சிறைவாசிகளின் விடுதலை முழக்கம் தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் முதல் குரல் திருச்சி மாவட்டத்தில் இருந்து துவங்க வேண்டும் சிறைவாசிகளின் விடுதலை கோரி ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
சிறைவாசிகள் விடுதலை கோரி பொதுக்கூட்டம் நடத்துவது ஏன்? என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரங்கள் பகுதி வாரியாக நடத்துவது.
இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையில் அதிக ஆர்வம் கொண்ட தலைவர்களை பொதுக் கூட்டத்திற்கு அழைப்பது.
0 Comments