// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** சிறைவாசிகள் விடுதலை கோரி பொதுக்கூட்டம் நடத்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவு

சிறைவாசிகள் விடுதலை கோரி பொதுக்கூட்டம் நடத்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவு

திருச்சி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் மாவட்ட துணை செயலாளர்கள் முகமது தாஹா. காஜாமைதீன் பழனிபாபா பேரவை மாவட்ட செயலாளர் காஜா மைதீன் மேற்கு தொகுதி செயலாளர் கே.டி.எஸ். பீர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.




கோவை சிறைவாசி அபுதாஹீரின் மறைவு மிகப்பெரிய  தாக்கத்தை சமூகத்தில்ஏற்படுத்திஉள்ளதுஎன்பது சம்பந்தமாகவும்  சிறைவாசிகளின்   விடுதலை மரணத்தில் மட்டும் தானா என்ற கேள்வியோடும் விவாதம் மிக கவலையோடு நடைபெற்றது.

இறுதியாக சிறைவாசிகளின் விடுதலை முழக்கம் தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் முதல் குரல் திருச்சி மாவட்டத்தில் இருந்து துவங்க வேண்டும் சிறைவாசிகளின் விடுதலை கோரி ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.




எனவே இந்த பொதுக்கூட்டம் நடத்துவது சம்பந்தமான ஆலோசனையில் தலைவர் கே.எம்.ஷெரிப்  அவர்களையும் மாநில நிர்வாகிகளையும் அழைப்பது




சிறைவாசிகள் விடுதலை கோரி பொதுக்கூட்டம் நடத்துவது ஏன்?  என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரங்கள் பகுதி வாரியாக நடத்துவது.

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையில் அதிக ஆர்வம் கொண்ட தலைவர்களை பொதுக் கூட்டத்திற்கு அழைப்பது.




பொதுக்கூட்ட நிகழ்வை வெற்றி நிகழ்வாக மாற்ற அரும்பாடு படுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.இறுதியாக மன்னச்சநல்லூர் தொகுதி செயலாளர் பெஸ்ட் ஃபாருக் அவர்கள் நன்றி கூறினார்.


Post a Comment

0 Comments